உத்தர பிரதேசத்தில் சிவன் கோவிலில் தொழுகை செய்த தாய், மகள் கைது

உத்தர பிரதேசத்தில் உள்ள சிவன் கோவிலில் தொழுகை செய்த தாய், மகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-17 13:03 GMT

கோப்புப்படம்

பரேலி,

உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியில் உள்ள சிவன் கோவிலில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மதகுரு ஒருவருடன் சேர்ந்து தொழுகை செய்த 38 வயது பெண் மற்றும் அவரது மகளை போலீசார் இன்று கைது செய்தனர். இது தொடர்பாக கேசர்பூர் கிராமத் தலைவரின் கணவர் பிரேம் சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியின் வட்ட அதிகாரி (CO) கவுரவ் சிங் கூறும்போது, மதகுருவின் ஆலோசனையின் பேரில் அந்தப் பெண்ணும் அவரது மகளும் கோவிலில் தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக நசீர் (வயது 38), அவரது மகள் சபீனா (வயது 19) மற்றும் மதகுரு சமன் ஷா மியான் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது, ஒரு சமூகத்தின் மத உணர்வுகளை சீர்குலைத்தல் மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்