வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-06-10 07:14 GMT
சென்னை,

சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவில், வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விபத்து ஏற்படுத்துபவர்களுக்கான தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்திய சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்