பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை - கோவை காவல் ஆணையர்

தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-08-23 07:42 GMT
கோவை,

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு, மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழலில், கோவை காவல் ஆணையர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- ”கோவையில் வணிக வளாகங்கள், கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . கோவை முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்