பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குலாம் மகள் அர்ஷியா (வயது 18). இவர் வீட்டில் ரோசி என்ற நாயை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அர்ஷியா, அவருடைய தங்கை ஆயிஷா ஆகியோர் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்தபோது நாய் ரோஷி அடித்து கொன்று கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ஷியா பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நாயை அடித்து கொன்றதாக வெங்கடசமுத்திரம் மஜித் தெருவை சேர்ந்த அக்பர் (58), அவருடைய மகன் ஜாகீர் (20) ஆகியோரை கைது செய்தார்.