காட்டுப்பன்றியை பிடிக்க நாட்டு வெடி வைத்திருந்தவர் கைது

காட்டுப்பன்றியை பிடிக்க நாட்டு வெடி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-07-27 01:00 IST

செஞ்சி 

செஞ்சி வனச்சரகர் வெங்கடேசன் மற்றும் வனத்துறையினர் செஞ்சி காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் மேல் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 20) என்பதும், காட்டுப்பன்றிகலை பிடிக்க விதிமுறைகளை மீறி நாட்டு வெடிகளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டு வெடிகளையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்