'தமிழகத்திற்கு தந்த திட்டங்கள் குறித்து பிரதமரை பேச சொல்லுங்கள்' - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் தமிழர்களை மாற்ற முடியாது என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.;

Update:2024-03-14 19:50 IST

மதுரை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டும். எத்தனை முறை வந்தாலும் தமிழர்களை மாற்ற முடியாது. பிரதமர் மோடி வரும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு தந்த திட்டங்கள் குறித்து பேச சொல்லுங்கள்.

அ.தி.மு.க.வின் தலைவர்களை பிரதமர் புகழ்ந்து பேசுகிறார். அதே கட்சியில் உள்ள மாநில தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இழிவாக பேசுகிறார். இதுபற்றி முதலில் பிரதமர் மோடி அண்ணாமலையிடம் பேச வேண்டும்."

இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்