நாமக்கல்லில் விடுதலைகளம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் விடுதலைகளம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-09-15 03:17 IST

நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலைகளம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசு எந்தவித புள்ளி விவரமும் இல்லாமல், எந்த கணக்கெடுப்பும் இன்றி முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து இருப்பது அடிப்படை சமத்துவ உரிமைக்கு எதிரானது என கூறியும், இதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், நகர தலைவர் முரளி, செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகிகள் மாதேஸ்வரன், நடராஜன், தங்கவேல், ரமேஷ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்