திண்டிவனம் அருகே 2 ஆம்னி பஸ்களின் கண்ணாடி உடைப்பு கல்வீசி தாக்கிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே 2 ஆம்னி பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2022-07-15 22:22 IST

திண்டிவனம், 

சென்னையில் இருந்து 2 ஆம்னி பஸ்கள் பயணிகளுடன் மதுரை, கோவை நோக்கி புறப்பட்டது. அந்த 2 பஸ்களும் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் அருகே கர்ணாவூர் பகுதியை கடந்து சென்றபோது, சாலையோரம் பதுங்கி இருந்த மர்மநபர்கள் திடீரென அடுத்தடுத்து வந்த 2 ஆம்னிபஸ்கள் மீது கற்களை வீசி தாக்கி விட்டு, அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இதில் 2 ஆம்னி பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள், பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்த புகார்களின்பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்துவதுடன், பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்