நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

Update: 2023-11-09 06:12 GMT

நீலகிரி,

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (9.11.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கீழ் கோத்தகிரியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் பில்லூர் அணை பகுதியில் 15 செ.மீ. மழையும், ஆழியாறு பகுதியில் 11 செ.மீ. மழையும், பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்