வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்

நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது; வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்.

Update: 2023-03-20 06:17 GMT

சென்னை

2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு

* கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் - நிதியமைச்சர்

* ரூ. 521 கோடியில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழிச் சாலையாக மேம்பாலம் கட்டப்படும்!

* விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ₹1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்!

* ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

* அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

* "புதிய சிப்காட் தொழிற்பேட்டை ரூ. 410 கோடி மதிப்பில் அமைக்கப்படும்"

* நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது; வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்.

* "திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 4,400 ஏக்கர் பரப்பளவு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன"

* "தேவாலயங்களை பழுதுபார்க்க வழங்கப்படும் மானியம் ரூ. 10 கோடியாக உயர்வு"

* "உலக முதலீட்டாளர் மாநாடுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு"

* "ரூ. 20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் உருவாக்கப்படும்"

* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும்

* 1000 புதிய பேருந்துகள் வாங்க, 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க, ₹500 கோடி நிதி ஒதுக்கீடு! 

Tags:    

மேலும் செய்திகள்