ஜாக்டோ, ஜியோ அமைப்பின் மாநாடு

நாகையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பின் மாநாடு நடந்தது.;

Update:2023-02-21 00:15 IST

நாகையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராணி, அந்துவன்சேரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கோரிக்கைகளை விளக்கி பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட நிதி காப்பாளர் காந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்