நெல்லை சென்ற வந்தே பாரத் ரெயில் மீது சரமாரி கற்கள் வீச்சு
ரெயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமானது.;
விருத்தாசலம்,
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது மர்மநபர்கள் ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரெயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இதனால் ரெயில் பயணிகள் அச்சமடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் தலையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் மீது கற்களை வீசிய மர்மநபர்கள் யார்? என அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.