சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஆட்டோவில் கடத்தல்

குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.;

Update:2025-12-15 02:02 IST

சென்னை,

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் போலீஸ் ஒருவர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வழிப்பாதையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வேகமாக ஆட்டோவை ஓட்டி வந்தார். ஆட்டோ டிரைவர் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. ஆட்டோவை பெண் போலீஸ் மடக்கினார். ஆட்டோவை நிறுத்துவதுபோல நிறுத்திய டிரைவர் பெண் போலீசை திடீரென்று கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றதாக தெரிகிறது.

இதனால் பெண் போலீஸ் கூச்சலிட்டார். வேகமாக சென்ற ஆட்டோவை பொதுமக்கள் மடக்கினர். பின்னர் பெண் போலீஸ் மீட்கப்பட்டார். குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்