ஈரோடு தவெக கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள்? செங்கோட்டையன் பதில்

ஈரோட்டில் வரும் 18 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.;

Update:2025-12-14 21:44 IST

 ஈரோடு, -

ஈரோட்டில், தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்செங்கோட்டில் த.வெ.க. சார்பில் நல திட்டங்கள் மற்றும் மக்கள் சேவை செய்ய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.நாளை ஈரோட்டில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொள்கிறார். வருகிற 18-ந்தேதி விஜய் ஈரோடு வர உள்ளார். அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலீஸ் சார்பில் 2 மணி நேரம் அதாவது அன்று பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூய்மையான ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி, மக்கள் சக்தியால் வரும் ஆட்சி வரும் நல்ல நாளை நாங்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். கரூர் ரோடு ஷோ, புதுச்சேரிக்கு பிறகு தமிழ் மண்ணான ஈரோட்டில் விஜய் கால் வைக்கிறார். 18 என்றால் 9 எண் வருகிறது. இதில் அனைத்து நட்சத்திரங்களும் அடக்கம். த.வெ.க தொண்டர்கள் 10 ஆயிரம் பேர், பொதுமக்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள். ஆம்புல்ன்ஸ், கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், விஜய் வரும் வழி, பொதுமக்கள் வருவதற்கு, கலைந்து செல்ல தனி இடம் போன்றவை போலீஸ் விதிமுறையாக இருந்தது. அவற்றை நிறைவேற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்