50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி; நண்பருடன் நகைக்கடை ஊழியர் கைது

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை ஊழியர் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-13 10:41 IST

50 பவுன் நகை

சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் மேலாளராக வேலை செய்பவர் சத்தியநாராயணன். இவர், மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அந்த புகார் மனுவில், "எங்களது நகைக்கடைக்கு பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்கள் கொடுத்த சுமார் 50 பவுன் நகைகளை, எங்கள் கடை ஊழியர் பிரபீர்ஷேக் என்பவர் அடகு வைத்து மோசடி செய்து விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.

ஊழியர் கைது

இது தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிரபீர்ஷேக் (வயது 32), தனது நண்பர் பாலமுருகன் (51) என்பவர் உதவியுடன் மேற்படி நகைகளை அடகு வைத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நகைக்கடை ஊழியரான பிரபீர்ஷேக் மற்றும் அவரது நண்பர் பாலமுருகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்