பேரறிவாளன் விடுதலை: அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே கவர்னர்! - திருமாவளவன்

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-18 15:44 GMT
கோப்புப்படம்
சென்னை, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம்கோர்ட்டு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி பேரறிவாளனை சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது. 

சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிவாளன்  விடுதலை: அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே கவர்னர்! 
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு! பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்!" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்