140-வது பிறந்த நாளையொட்டி திரு.வி.க. சிலைக்கு மலர் தூவி மரியாதை

தமிழ் தென்றல் திரு.வி.க. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;

Update:2023-08-27 11:09 IST

மதுரவாயல்,

தமிழ் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 140-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மதுரவாயல் வட்டத்தில் உள்ள அவரது பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. க.கணபதி, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ந.அருள் மற்றும் தமிழறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திரு.வி.க. வாழ்ந்த இல்லம் தற்போது நூலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திரு.வி.க. சிலை மற்றும் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் உள்பட திரளான பொதுமக்களும் அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறும்போது, "திரு.வி.க.வுக்கு இந்த பகுதியில் மணிமண்டபம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்ற நல்ல செய்தி வரும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்