ஆரணி அருகே எருது விடும் விழா - 250 காளைகள் பங்கேற்பு...!

ஆரணி அருகே நடந்த எருது விடும் விழாவில் 250 காளைகள் பங்கேற்றனர்.;

Update:2022-07-04 14:50 IST

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து எருது விடும் விழா நடந்தது. இவ்விழாவில் வேலூர், தர்மபுரி,படவேடு, காளசமுத்திரம், கீழ அரசம்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

வாடிவாசல் வழியாக காளைகளை கட்டவிழ்த்து விடப்பட்டனது. சீறிப்பாய்ந்த காளைகளை அங்கிருந்த இளைஞர்கள் தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். திரளாக பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மின்னல் வேகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்