மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2024-02-25 11:03 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மற்றும் நகரம், பெலாகுப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 9). கடந்த 23.02.2024 அன்று மாலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின்மோட்டாரைப் பயன்படுத்தும்போது சிறுவன் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவனை சிகிச்சைக்காக அருகிலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்