ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு: நடனமாடி கொண்டாடிய கோத்தகிரி பழங்குடியின மக்கள்

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றதை கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2022-07-25 10:01 GMT

கோத்தகிரி:

இந்திய ஜனாதிபதியாக பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு பதவி ஏற்றுக் கொண்டதைக் கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசு தலைவராக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டதைக் கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பகுதியில் ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆதிவாசி மக்கள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்