பிரேசில்: சுற்றுலா மினி பஸ்-லாரி மோதலில் 25 பேர் பலி

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் மினி பஸ்சில் இருந்தவர்கள் என போலீசார் கூறினர்.;

Update:2024-01-09 08:53 IST

பஹியா,

பிரேசில் நாட்டின் வடகிழக்கே அமைந்த பஹியா மாகாணத்தில் நோவா பாத்திமா மற்றும் கவியாவோ நகரங்களுக்கு இடையே மத்திய சாலையில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு மினி பஸ் ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அதில், 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இந்நிலையில், திடீரென லாரி ஒன்றுடன் மோதி அந்த மினி பஸ் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் மினி பஸ்சில் இருந்தவர்கள் என போலீசார் கூறினர். விபத்துக்கான காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்