வடகொரியாவில் நவீன ஆயுதங்களை அதிகரிக்க கிம் ஜாங் அன் உத்தரவு

வடகொரியாவில் நவீன ஆயுதங்களை அதிகரிக்க கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2023-08-15 02:37 IST

Image Courtacy: AFP

சியோல்,

அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி மாத இறுதியில் இந்த ஆண்டுக்கான போர்ப்பயிற்சி நடைபெற உள்ளது. ஆனால் இதனை போருக்கான நடைமுறை என கருதும் வடகொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் வடகொரியாவில் உள்ள வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் அதிபர் கிம் ஜாங் அன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் நவீன ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை விரைந்து செய்து முடிக்க அவர் ராணுவத்துக்கு உத்தரவிட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்