இலங்கையில் ஜனாதிபதி அலுவலகம் முற்றுகை: போராட்டக்காரர்கள் 21 பேர் கைது

இலங்கையில் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் 21 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2022-06-21 00:17 IST

கொழும்பு,

70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை தடுமாறி வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வலியுறுத்தி, கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் நேற்று 73-வது நாளை எட்டியது.

இந்தச் சூழலில், ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து நுழைவுவாயில்களையும் போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஒரு புத்த துறவி, 4 பெண்கள் உள்ளிட்ட 21 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஜனாதிபதி செயலகத்தின் நுழைவுவாயில்கள் வழியாகத்தான் நிதி அமைச்சகத்துக்கும், அரசு கருவூலத்துக்கும் செல்ல முடியும்.

நிதி அமைச்சகத்துக்கு சர்வதேச நாணய நிதிய குழு வருகைதரும் நிலையில், 2 நுழைவுவாயில்களை திறந்து வைத்திருக்கும் வகையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்