கனடாவில் கத்திக்குத்து தாக்குதல்: இலங்கையை சேர்ந்த 6 பேர் பலி

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-03-08 02:27 GMT

 ஒட்டாவா,

கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், பார்ஹெவன் பகுதியில் வசித்துவந்த தர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நேற்று இரவு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தர்ஷினி, அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் என 6 பேர் உயிரிழந்தனர். தர்ஷினியின் கணவர் படுகாயமடைந்தார்.

இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இலங்கையை சேர்ந்த டி சொய்சா என்ற 19 வயது இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் டி சொய்சா, கொல்லப்பட்ட தர்ஷினியின் வீட்டியில் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதேவேளை, இந்த படுகொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்