இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம்; மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

கொழும்பு - கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2022-05-21 13:00 GMT

கொழும்பு,

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசினர். தண்ணீர் பீய்ச்சியடித்து மாணவர்களை கலைக்க போலீசார் முயற்சித்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி வீதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டமானது காலிமுகத்திடலில் போராட்டத்தில் கோட்டா கோ கம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்