ஹர்திக் பாண்ட்யா - நடாஷா தம்பதி விவாகரத்தா..? வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது மனைவி நடாஷாவிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2024-05-25 05:01 GMT

image courtesy: instagram/hardikpandya93

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்களாகும். ஆனால், கடந்த சில தினங்களாகவே இந்த ஜோடி பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பேற்ற நிலையில் கூட, நடாஷாவை ஒரு போட்டியில் கூட மைதானத்தில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில்தான் ஹர்திக் மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் 2020-ல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்ததன் மூலம், தம்பதியினர் பெற்றோரானார்கள். 2023-ம் ஆண்டு காதலர் தினத்தில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகின.

சமீபத்தில் நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பயோவிலிருந்து 'பாண்ட்யா' என்ற குடும்பப்பெயரை நீக்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் அவரது பிறந்தநாளின்போது கூட, ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் வெளியிடவில்லை. மகன் அகஸ்தியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து, ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதள கணக்கிலிருந்து நடாஷா நீக்கியுள்ளதாக தெரிகிறது.

இதுபோன்ற காரணங்களால்தான் அவர்கள் பிரிய உள்ளதாக பலரும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், அவர்களின் சமீபத்திய சமூக ஊடக செயல்பாடுகள் ஹர்திக் - நடாஷாவின் விரிசலை காட்டுவதாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்