தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணிக்கு 2-வது வெற்றி

தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

Update: 2019-02-20 22:34 GMT
அவுரங்கபாத்,

ஆண்களுக்கான 9-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் சர்வீசஸ் அணியை சந்தித்தது. இதில் தமிழக அணி 4-1 என்ற கோல் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. தமிழக அணி தரப்பில் செந்தில்குமார் 29-வது நிமிடத்திலும், திராஸ் 30 மற்றும் 32-வது நிமிடத்திலும், கார்த்தி 33-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

மேலும் செய்திகள்