மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஜோதிகா

சூர்யா- ஜோதிகாவின் மூத்த மகள் தியாவின் பள்ளி படிப்பு பட்டமளிப்பு விழா மும்பையில் நடைபெற்றது.;

Update:2025-05-30 18:08 IST

மும்பை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'காக்க காக்க', 'சில்லுனு ஒரு காதல்', 'மாயாவி' ஆகிய படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் படங்களில் பணியாற்றி வரும் பொழுது காதல் மலர்ந்தது. பின்னர் 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.

தியா மற்றும் தேவ் இருவரின் பள்ளி படிப்பிற்காக சூர்யாவும் ஜோதிகாவும் சென்னையிலிருந்து மும்பைக்கு குடிப்பெயர்ந்தனர். சூர்யா ஜோதிகாவின் இந்த செயல் விமர்சனத்திற்கு உள்ளானது. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட நடிகை ஜோதிகா தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் மீண்டும் திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் மூத்த மகள் தியா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டார். அதற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. கையில் சான்றிதழ்களுடன் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் என ஒட்டு மொத்த குடும்பமும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்