இயக்குநர் எச்.வினோத் பிறந்த நாள்: சிறப்பு வீடியோ வெளியிட்ட “ஜன நாயகன்” படக்குழு
விஜய்யின் ‘ஜன நாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இது விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் இயக்குநர் எச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி படக்குழு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.