சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்!.. விலை என்ன தெரியுமா?
கார் பிரியரான பகத் பாசில் தற்போது புதிய பெராரி காரை வாங்கி உள்ளார்.;
கொச்சி,
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகராக இருப்பவர் பகத்பாசில். தனது யதார்த்த நடிப்பினால் பெரும்பாலான திரை உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கார் பிரியரான பகத்பாசில் ஏற்கனவே லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏ.எம்.ஜி., ரேன்ஞ்ரோவர் ஆட்டோ பயோகிராப்பி, லேண்ட்ரோவர் டிபண்டர், போர்ச்சே 911, டொயோட்டா வெல்பைர், மினிகண்ட்ரிமேன், வோக்ஸ் வேகன் போன்ற ஆடம்பர வசதிகளுடன் கூடிய கார்கள் உள்ளன.
நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்ட பகத்பாசில் தற்போது புதிய பெராரி காரை வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.1 கோடியோ ரூ.2 கோடியோ கிடையாது. ஆனால் இந்த காரின் விலை ரூ.13.75 ஆகும். முகேஷ் அம்பானி, நடிகர் விக்ரம் ஆகியோரிடம் இந்த கார் உள்ளது குறிப்பிடத்தக்கது.