''எனக்கு ரோல் மாடல் அவர்தான் ''...- நடிகை பிரிகிடா

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடைபெற்றது.;

Update:2025-09-15 08:36 IST

சென்னை,

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கும்நிலையில், நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், நடிகை பிரிகிடா சாகா கலந்துகொண்டு பேசுகையில்,

''வாழ்க்கையில் எல்லோருக்குமே ஒரு ரோல் மாடல் இருப்பாங்க. எனக்கு தனுஷ் சார். அவரின் மிகப்பெரிய ரசிகை நான். அவர் படத்தில் நடித்திருப்பது, வாழ்நாள் சாதனையாக உணர்கிறேன். வாழ்க்கையில் அடுத்து பெரிதாக எதாவது பண்ண வேண்டும் என்று இருந்தபோது எனக்கு இந்த ''இட்லி கடை'' பட வாய்ப்பு கிடைத்தது. இங்கு நான் இருக்க காரணமாக இருந்த அனைவருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கொள்கிறேன்'' என்றார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், பிரிகிடா சாகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்