''சின்ன வயதில்...என் பெற்றோருக்கு தெரியாமல்''...- நடிகை அனுபமா

ஹாரர் படங்களை பற்றி அனுபமா பகிர்ந்து கொண்டார்.;

Update:2025-09-07 15:23 IST

சென்னை,

அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'கிஷ்கிந்தாபுரி'' படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கவுஷிக் பெகல்லபதி இயக்கிய இந்தப் படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான டிரெய்லரில், அனுபமாவை பேய் உருவத்தில் காட்டி இருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில், ஹாரர் படத்தை பற்றி அனுபமா பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும். நான் சின்ன வயதில் இருக்கும்போது ரகசியமாக பேய் படங்களைப் பார்ப்பேன். என் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு, ஹாரர் படங்களைப் பார்ப்பேன். அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பார்ப்பேன்'' என்றார்.

நடிகை அனுபமா கடைசியாக பரதாவில் நடித்திருந்தார். அது பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை. தற்போது கிஷ்கிந்தாபுரி நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையுடன் அவர் இருக்கிறார். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்