82-வது வெனிஸ் திரைப்பட விழா...வரலாறு படைத்த அனுபர்ணா ராய்
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை இத்தாலியில் உள்ள வெனிஸ் லிடோவில் நடைபெற்றது.;
சென்னை,
82-வது வெனிஸ் திரைப்பட விழாவில் ஒரிசோன்டி பிரிவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்று வரலாறு படைத்திருக்கிறார் இயக்குனர் அனுபர்ணா ராய். ‘சாங்ஸ் ஆப் பர்ஹாட்டன் டிரீஸ்’ (songs for forgotten trees) படத்திற்காக அவர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் இந்த பிரிவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுபர்ணா ராய் பெற்றிருக்கிறார்.
சுமார் 80 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் இயக்குனர் அனுபர்ணா ராயின் முதல் படைப்பு. இதற்கு முன் ‘ரன் டூ தி ரிவர்’ எனும் குறும்படத்தை இவர் இயக்கியிருக்கிறார்.
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6, 2025 வரை இத்தாலியில் உள்ள வெனிஸ் லிடோவில் நடைபெற்றது.