விவாகரத்து முடிவா? வதந்திகளுக்கு தனது ஸ்டைலில் பதிலளித்த நயன்தாரா

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து முடிவில் இருப்பதாக நிறைய வதந்திகள் பரவின.;

Update:2025-07-10 17:17 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இஅவர்கள் வாடகைத் தாய் மூலமாக உயிர் மற்றும் உலகம் என்ற 2 ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் தங்கள் இரண்டு மகன்கள் உடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து முடிவில் இருப்பதாக நிறைய வதந்திகள் பரவின.

இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். அதாவது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "எங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு ரியாக்ஷன் இதுதான்" என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். இதன் மூலம், இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நயன்தாரா உறுதிபடுத்தியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்