பாலாவுக்கே இந்த நிலைமையா... படக்குழுவினர் வேதனை: காரணம் என்ன ?

'காந்தி கண்ணாடி' படம் நேற்று முன்தினம் வெளியானது.;

Update:2025-09-07 11:45 IST

சென்னை,

சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் ஷெரிப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் காந்தி கண்ணாடி. இதில், பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, அமுதவாணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'காந்தி கண்ணாடி' படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், காந்தி கண்ணாடி திரைப்படத்தை திரையிடாமலும், பேனர்களை கிழிப்பதாகவும் அத்திரைப்படத்தின் இயக்குநர் ஷெரிஃப் வேதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை வடபழனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ,

தியேட்டர்களில் படம் புக்கிங் தொடங்குகிறது ஆனால் பின்னர் தியேட்டர்களில் படம் திரையிடப்படவில்லை என தொலைபேசியில் அழைத்து சொல்கிறார்கள் . ஏன் இப்படி நடக்கிறது என தெரியவில்லை தியேட்டர்களில் பேனர் கூட வைக்க விடாமல் கிழிக்கிறர்கள். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ள திரைப்படத்திற்கு, யாரோ இப்படி எதிர்ப்பு தெரிவிப்பது, வருத்தமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்