திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டுவதில் தவறு கிடையாது- ரகுல் பிரீத் சிங்
கவர்ச்சியை ரசிப்பதில் தவறே கிடையாது, வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.;
மும்பை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘திருமணம் நடிகைகளின் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ தடை போடாது. திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டுவதில் தவறு கிடையாது.
இன்னும் சொல்லப்போனால், திருமணத்துக்கு பிறகு தான் எனது அழகும், கவர்ச்சியும் கூடியிருப்பதாக உணருகிறேன். கவர்ச்சியை ரசிப்பதில் தவறே கிடையாது. வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும்'' என்று சிரிப்புடன் பதில் அளிக்கிறார் ரகுல் பிரீத் சிங்.