கூலி படத்தின் டிரெய்லர் எப்போது..? அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படம் ஆகஸ்ட் 14ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-07-14 21:52 IST

சென்னை,

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்திலிருந்து 'சிக்கிட்டு' மற்றும் 'மோனிகா' என்ற பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிரெய்லர் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கூலி படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்