ஓடிடியில் வெளியாகும் மாதவனின் புதிய படம்
மாதவன் நடித்துள்ள புதிய படம் 'ஆப் ஜெய்சா கோய்';
மும்பை,
ஆர் மாதவன் மற்றும் பாத்திமா சனா ஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ஆப் ஜெய்சா கோய்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
மாதவன் கடைசியாக அக்சய் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ''கேசரி சாப்டர் 2'' படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மாதவன் நடித்துள்ள புதிய படம் 'ஆப் ஜெய்சா கோய்' . இதில் கதாநாயகியாக ''தங்கல்'' பட நடிகை பாத்திமா சனா ஷேக் நடித்திருக்கிறார்.
இப்படம் நெட்பிளிக்ஸில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய போஸ்டருடன் இதனை அறிவித்துள்ளனர். விவேக் சோனி இயக்கி இருக்கும் இப்படத்தை கரண் ஜோஹர், ஆதார் பூனாவல்லா, அபூர்வா மேத்தா மற்றும் சோமன் மிஸ்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.