திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை தினமான இன்று கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன், கார், ஜீப் போன்ற வாகனங்களில் திருமலைக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரம் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.