டெல்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு
தலைநகர் டெல்லியில் இன்று மாலை கனமழை பெய்தது.;
டெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று மாலை கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி வரவிருந்த 15 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் கால தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
அதேபோல், கனமழை காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேவேளை, மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.