மராட்டியத்தில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் -ஒருவர் கைது

தானே மாவட்டத்தில் ரூ.12.9 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2025-02-05 10:56 IST

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நிஜாம்புரா போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல கிடைத்தது. இதன் அடிப்படையில் பிவாண்டியில் உள்ள மில்லத் நகர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிவதைக் கண்டனர்.

அவரிடம் நடத்திய சோதனையில் ரூ.12.9 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சாவை போலீசார் மீட்டனர். இந்த போதைப்பொருள் கடத்திய 27 வயதுடைய அந்த நபரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் நான்டெட் மாவட்டத்தில் உள்ள லோஹா தாலுகாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எங்கிருந்து இந்த போதைப்பொருள் கிடைத்தது, யாருக்கு அவற்றை விற்க முயற்சித்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்