இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 4 பேர் பலி

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-11 00:28 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பதாவுன் - மொராதாபாத் நெடுஞ்சாலையில் நேற்று பைக் சென்றுகொண்டிருந்தது. அந்த பைக்கில் 3 பேர் பயணித்தனர்.

சாலையில் வளைவில் திரும்பியபோது 2 பேருடன் எதிரே வந்த பைக் மீது நேருக்கு நேர் இந்த பைக் மோதியது. இந்த கோர விபத்தில் 2 பைக்கிலும் பயணித்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்களை பரிசோதித்த டாக்டர், விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். எஞ்சிய ஒரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்