பட்டப்பகலில் மணல் குவாரி தொழிலதிபர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ராம்கந்த் நேற்று மதியம் தனது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்;
பாட்னா,
பீகார் மாநிலம் ரூரல் பாட்னா மாவட்டம் தனா கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராம்கந்த் (வ்யது 50). இவர் அப்பகுதியில் மணல் குவாரி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ராம்கந்த் நேற்று மதியம் தனது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் ராம்கந்தை சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராம்கந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராம்கந்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராம்கந்தை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.