கட்டுப்பாட்டை இழந்த லாரி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்து - கேரளாவில் பரபரப்பு

விபத்தில் காயமடைந்த சிறுமி உள்பட 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-12-10 18:14 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது.

இதனால் எதிரே வந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு, அங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்