பிரதமர் மோடி பாதி நாட்கள் வெளிநாட்டில்தான் இருக்கிறார் - பிரியங்கா காந்தி பதிலடி
நாடாளுமன்றம் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு நாயகன் (ராகுல் காந்தி) மீண்டும் தன்னால் முடிந்ததை செய்கிறார் என்று பாஜக விமர்சனம் செய்தது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி வருகிற 15-ம் தேதி ஜெர்மனி செல்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் நேரத்தில் அவர் வெளிநாடு செல்வதை பாஜக விமர்சித்தது. வெளிநாட்டு நாயகன் என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்தது.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோரியுமான பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறும்பொது,
பிரதமர் தனது வேலை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி நாட்களில் வெளிநாடுகளிலேயே செலவிடுகிறார், இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி எழுப்புவது ஏன்? என்றார்.