ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.;

Update:2025-07-09 14:21 IST

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் போர் விமானம் விழுந்தது. விமானம் வழக்கமான பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில்  2 விமானிகளும் உயிரிழந்துள்ளதாக விமானப் படை அறிவித்துள்ளது.  விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல் துறையினர், ராணுவ அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்படும் போது  திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் சிக்குவது கடந்த ஐந்து மாதங்களில் இது மூன்றாவது முறையாகும். 

 

 

Tags:    

மேலும் செய்திகள்