அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர அவசரமாக தரையிறக்கம்
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.;
டெல்லி,
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 பயணிகள், 19 ஊழியர்கள் என மொத்தம் 322 பேர் பயணித்தனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தின் கழிவறையில் ஒரு கடிதம் கிடந்தது. அந்த கடித்தத்தில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை இறக்கிவிட்டபின் விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.