யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து; பாஜக எம்.எல்.ஏ. சகோதரர் கைது
கோரக்பூர் மாவட்டம் பிப்ரிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. மகேந்திரபால் சிங்;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பிப்ரிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. மகேந்திரபால் சிங். இவரது சகோதரர் பூபேந்திரபால் சிங்.
இதனிடையே, பூபேந்திரபால் சிங் கடந்த சில நாட்களுக்குமுன் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பூபேந்திரபால் சிங் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட நிலையில் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பூபேந்திரபால் சிங்கை போலீசார் இன்று கைது செய்தனர். குஷிநகரில் உள்ள ஓட்டலில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூபேந்திரபால் சிங்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.