பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஒரே வாரத்தில் 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
பெங்களூரு,
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் நடத்திய சோதனையில் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரே வாரத்தில் 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.