சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது - ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்கு சந்திரபாபு நாயுடு வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-03 23:48 IST

கோப்புப்படம்

அமராவதி,

ஆந்திர பிரதேச முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தினசரி அத்தியாவசியப் பொருட்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் திருத்தப்பட்ட அடுக்குகளுடன் கூடிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏழைகளுக்கு ஆதரவான, வளர்ச்சி சார்ந்த இந்த முடிவு, விவசாயிகள் முதல் வணிகங்கள் வரை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்தபடி, இந்த அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் நமது வரி கட்டமைப்பின் மூலோபாய மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்